சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து இசை கருவியில் மறைத்து கடத்தி வந்த ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாய் விமானத்தில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
இசை கருவியில் தங்கம்
அதில் குழந்தைகளுக்கான இசை கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அந்த இசை கருவிக்குள் தங்கத்தை கம்பிகளாக மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வாலிபரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.