நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: “அ.தி.மு.க. வெற்றி பெறும், அதன் பின் என்னிடம் வரும்” - சசிகலா நம்பிக்கை
தேர்தலுக்கு பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக சசிகலா தெரிவித்தார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வி.கே.சசிகலா சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் எனவும், தேர்தலுக்கு பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாகவும், அதிமுக விரைவில் என்னிடம் வரும்.
அ.தி.மு.க.வினர் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. 8 மாத கால ஆட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என வி.கே.சசிகலா தெரிவித்தார்.