தமிழகம் முழுவதும் இந்த மாதம் 25 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்து அறநிலையத்துறை தகவல்

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 25 கோவில்களில் இந்த மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது.

Update: 2022-02-02 22:25 GMT
சென்னை,

கடந்த 5 மாதங்களில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கும்பகோணம் தாலுகா திருநாகேஸ்வரம் நாகநாத சாமி கோவில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கொங்குநாச்சி அம்மன் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்பட 50 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி சீனிவாச வரதராஜ பெருமாள் கோவில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி திருவழுதீஸ்வரர் கோவில், ராதாபுரம் சுப்பிரமணியசுவாமி கோவில், பாபநாசம் தாமோதர விநாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார் கோவில், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி செல்லப்பர் வகையறா கோவில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் விஸ்வநாதசுவாமி கோவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வளரொளீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றாங்கரை ஆனந்த வல்லியம்மன் கோவில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் கரியகாளியம்மன் கோவில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் ஆகியவற்றில் வருகிற 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

25 கோவில்களில் ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தட்டாரப்பட்டு தேவி குங்குமக்காளியம்மன் கோவிலில் 7-ந் தேதியும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சீனிவாச பெருமாள் கோவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலந்தூர் வீரனார் மற்றும் அய்யனார் கோவில்,

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தாலுகா பெரியகண்டியாங் குப்பம் வெண்மலையப்பர் கோவில், பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகியவற்றில் 11-ந் தேதியும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பாளுர் கல்யாண சுந்தரியம்மன் கோவிலில் 20-ந் தேதியும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த மாதம் மட்டும் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 25 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்