வாக்காளர் பட்டியலில் குளறுபடி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. புகார்
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும், அதை சரிசெய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்டது. இந்த பணிகள் முடிவடைந்து ஜனவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
குறிப்பாக ஒரே சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பெயரை மாற்றம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் விரோத நடவடிக்கை
தேர்தல் அலுவலர்கள் ஆளுங்கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு வாக்காளர்களின் பெயர்களை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தன்னிச்சையாக மாற்றி உள்ளனர். அவ்வாறு வேறொரு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டவர்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறாமல் இது நடைபெற்றுள்ளது.
தங்களுக்கு சாதகமில்லாத பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சாதகமான பகுதிகளுக்கு மாற்றம் செய்து தி.மு.க.வினர் தேர்தல் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் ஒரே வீட்டில் வசிக்கும் தாய்-மகனின் பெயர்கள் வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
குளறுபடிகள்
வாழப்பாடி பேரூராட்சியில் மட்டும் 43 வாக்காளர்களை இதேபோன்று வெவ்வேறு வார்டுகளுக்கு மாற்றி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுபோன்ற குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, உடனடியாக இந்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.