முடியில் மறைத்து தங்கம் கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் 3 பெண்கள் கைது

சோதனையின் போது, அந்த பெண்கள் தலையில் சவுரி முடி வைத்து அதன் உள்ளே தங்கத்தை மறைத்து கடத்தியது தெரிய வந்தது.

Update: 2022-02-01 11:11 GMT
சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சோதனை செய்யும் பணியில் சுங்க இலாகா அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது இலங்கையில் இருந்து வந்த 3 பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் அந்த பெண்கள் தலையில் சவுரி முடி வைத்து அதன் உள்ளே தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 22 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பெண்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்