லாவண்யா தற்கொலை விவகாரம்: தஞ்சையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை
பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தஞ்சையில் நேற்று விசாரணை நடத்தியது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்த மாணவி லாவண்யா கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விடுதி காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவியை மதமாறுமாறு வற்புறுத்தியதாக வெளியான வீடியோ நாடெங்கிலும் பெரும் அதிர்வலைய ஏற்படுத்தியதால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இது தொடர்பாக விசாரணையை தொடங்கியது.
3 பேர் குழு விசாரணை
இதையடுத்து ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ, உறுப்பினர்கள் மதுலிகா சர்மா, கத்யாயினி ஆனந்த் ஆகியோர் நேற்று தஞ்சையில் விசாரணையை தொடங்கினர்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஹேமா அகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், அஞ்சை, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் உதயபானு, அருள்மதிகண்ணன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திலகவதி, மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல், மைக்கேல்பட்டி கிராம மக்கள், முன்னாள் பள்ளி மாணவிகள், தற்போது அதே பள்ளியில் படித்து வரும் மாணவிகள், மாணவியின் தாய் வழி தாத்தா-பாட்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி தங்களது கருத்துகளை ஆணையத்திடம் தெரிவித்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய விசாரணை நண்பகல் 11.50 மணி வரை நடந்தது. ஆணையம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்கப்படும் கேள்விகளையும், பதில்களையும் கூடுதல் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா ஒருங்கிணைத்தார்.
பள்ளியிலும் விசாரணை
பின்னர் ஆணையத்தினர் மாணவி படித்த மைக்கேல்பட்டி பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியின் அங்கீகார ஆவணங்கள், காப்பகத்தின் ஆவணங்களையும் சரிபார்த்தனர்.
பின்னர் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவிகள், காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மைக்கேல்பட்டியில் சுமார் 1.30 மணி நேரம் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர்.
காலாவதியாகி விட்டது
பின்னர் அரியலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு ஆணையத்தினர் சென்றனர்.
அங்கு பேட்டியளித்த ஆணைய தலைவர், ‘தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி தங்கியிருந்த இல்லத்தின் உரிமம், கடந்த நவம்பர் மாதமே காலாவதியாகிவிட்டது’ என்று தெரிவித்தார்.