துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார்.

Update: 2021-12-31 15:59 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்படடி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் நேற்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று நார்த்தாமலையில் குடிசை வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி (வயது 11) தலையில் பாய்ந்தது. 

இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு தலையில் இருந்த குண்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சியால் சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி இன்று விசாரணையை தொடங்கி உள்ளார். 

அவரது அலுவலகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் 2 பேர் திருச்சியில் இருந்து வந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளும் உடன் உள்ளனர். வருவாய்த்துறையினரும் உடன் இருக்கின்றனர். மாலை 5 மணியளவில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்