தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை - விவரம் வெளியீடு
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மாவட்டம் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர், பெண்கள் 38 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 227 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்தவர்களில் 24-35 வயது வரை உள்ளவர்கள் 26 லட்சத்து 86 ஆயிரத்து 932 பேர், 36-57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர், 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 11 ஆயிரத்து 245 பேர் ஆவர்.
அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 871 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 140 பேர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 66 ஆயிரத்து 386 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.