சென்னையில் திடீரென பெய்த சாரல் மழை

சென்னையில் திடீர் சாரல் மழை பெய்து மக்களை குளிர்வித்து உள்ளது.

Update: 2021-12-30 07:12 GMT

சென்னை,


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.  வரலாறு காணாத வகையில், இந்த ஆண்டு அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்துள்ளது.  இதன்படி, சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து மக்களை குளிர்வித்துள்ளது.

மேலும் செய்திகள்