புதுக்கோட்டை: துப்பாக்கி சூடு பயிற்சியில் குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்

புதுக்கோட்டை அருகே சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் துப்பாக்கி பயிற்சியின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த பாட்டி வீட்டுக்கு வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-12-30 05:22 GMT


புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், இன்று பயிற்சியின் போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.

இதனை தொடர்ந்து புதுகோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  எனினும், உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  இதற்காக அவர் தஞ்சைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

மேலும் செய்திகள்