ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-12-29 07:39 GMT
ராமேஸ்வரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். அந்த மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி கடந்த 20 ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதனால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகள் வெளியுறவுத்துறை மந்திரியை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் வரும் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் ரெயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்