கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு - வைரலாகும் வீடியோ

கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2021-12-29 06:35 GMT
 கோவை,

கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள்  கார்த்திகை மாதத்தை ஒட்டி அய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர்.

இந்த கோயிலில் 40-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். 

அந்த வீடியோவில் கண் திறந்து மூடுவது போல காட்சிகள் பதிவாகி இருந்தன. உடனடியாக அந்த வீடியோவை பதிவு செய்தவர் நெகிழ்ச்சி அடைந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காண்பித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரபரப்பையும் பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்