‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடு கண்ணெதிரே இடிந்தது நெஞ்சையே நொறுக்கிவிட்டது’ பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை
கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடு கண்ணெதிரே இடிந்தது நெஞ்சை நொறுக்கிவிட்டது என்றும், நகை-பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பறிபோய்விட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. முன் எச்சரிக்கையாக மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டதால் அக்கட்டிடத்தில் குடியிருந்த 24 குடும்பங்களும் உயிர் தப்பித்தனர்.
இதுகுறித்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் குடியிருந்த ராஜேஸ்வரி-விஜயகுமார் தம்பதி கூறியதாவது:-
நெஞ்சையே நொறுக்கிவிட்டது
நேற்று (நேற்று முன்தினம்)இரவிலேயே வீட்டின் பல இடங்களில் விரிசல் இருப்பதை பார்த்தோம். இதனால் திக்... திக்... மனநிலையுடனேயே தூங்க சென்றோம். ஆனாலும் தூக்கம் வரவில்லை. என்ன ஆகுமோ... என்ற பீதியிலேயே இருந்தோம். காலையில் விரிசல் அதிகமாகி, வீட்டை விட்டு வெளியேறிய கொஞ்ச நேரத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. எங்கள் கண் எதிரிலேயே இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வீடு தரைமட்டமாகி போனது. எங்கள் நெஞ்சையே நொறுக்கிவிட்டது. நல்லவேளையாக முன்கூட்டியே வீட்டை விட்டு வெளியேறியதால் நாங்கள் எல்லாம் உயிர் பிழைத்திருக்கிறோம். இதற்காக இறைவனுக்கு நன்றி. இன்று எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது. அரசுதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முறையான ஆய்வு நடக்கவில்லை
அருகே உள்ள கட்டிடத்தில் குடியிருக்கும் ரேவதி:- கட்டிடம் இடிந்த சம்பவம் எங்களை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த கட்டிடம் சிதிலம் அடைய தொடங்கியபோதே, உரிய நடவடிக்கை கோரி விண்ணப்பித்தோம். ஆனால் அதிகாரிகள் முறையான ஆய்வை மேற்கொள்ளவே இல்லை. மேலோட்டமாக ஆய்வு நடந்ததே தவிர, முறையான ஆய்வு செய்யப்படவில்லை. அப்படி செய்யப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. இதனால் அருகே உள்ள எங்கள் கட்டிடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உடைமைகளை இழந்து பரிதவிக்கிறார்கள். எனவே அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பணம், நகையெல்லாம் போச்சு...
இல்லத்தரசி பவானி:- இந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் உயிர் பிழைத்ததே அதிசயம்தான். ஆனால் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறோம். கஷ்டப்பட்டு சேகரித்த பணம், நகை எல்லாம் வீடுகளில்தான் இருந்தது. பார்த்துபார்த்து ஆசையாக வாங்கிய பொருட்கள், வீட்டு உபயோக சாதனங்கள் அனைத்துமே பறிபோய்விட்டது. வீட்டை விட்டு வெளியே வந்தபோது குழந்தைகளையும், தகவல் தொடர்புக்காக செல்போனையும் மட்டுமே தூக்கிக்கொண்டு வந்தோம். இதைத்தவிர இப்போது எங்களிடம் எதுவும் கிடையாது. அடுத்து என்ன ஆகுமோ... என்ற பீதியில் இருக்கிறோம். கடந்த பெருமழைக்காலம் முடிந்த பின்னரே உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்திருந்தால் இந்த பிரச்சினை இருந்திருக்காது.
அரசுதான் எங்களுக்கு துணை
இல்லத்தரசி மஞ்சுளா:- இப்போதைக்கு எங்களிடம் ஒன்றுமே கிடையாது. துவைத்த துணிகளை கூட அப்படியே போட்டுவிட்டு வந்துவிட்டோம். எனவே அரசுதான் எங்களுக்கு ஒரே துணை. எங்களுக்கு மாற்று இடம் தருவதுடன், விரைவில் நாங்கள் குடியிருக்க நிரந்தர குடியிருப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். அதுவே எங்களின் பெரிய தேவை. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தரமற்ற, பழுதான, சிதிலமடைந்த கட்டிடங்கள் கணக்கிடப்பட்டு, அதன்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம், பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டனர்.