கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-12-26 08:27 GMT
சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. இவர் இன்று தனது 97- வது கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன், கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

பொதுவாழ்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்லாக மாறிவிட்ட மாபெரும் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97-ஆவது பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வணங்கினேன்.  இன்னும் பல்லாண்டுகள் தம் சிந்தனைக்கொடையால் நம் தமிழ்ச்சமூகத்தை அவர் செறிவூட்டட்டும்!

மேலும் செய்திகள்