"வியூகம் அமைப்பதில் கருணாநிதி போல் நீங்கள் செயல்பட வேண்டும்"- ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

தேசிய அரசியலிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2021-12-24 16:33 GMT
சென்னை,

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-  தமிழ் மண்ணை காக்க நாங்கள் எப்போதும் திமுக உடன் இருப்போம்.  பாஜகவிற்கு எதிராக அகில இந்தியா அளவில் கட்சிகளை ஒருங்கிணைக்க கூடிய ஆற்றல் முதல்வருக்கு உண்டு. 

வியூகம் அமைப்பதில் கருணாநிதி போல் நீங்கள் செயல்பட வேண்டும். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கினால் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வரும். தேசிய அரசியலிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்” என்றார். 

மேலும் செய்திகள்