சகிப்புத்தன்மை, அகிம்சை, அன்பை போதித்த இயேசு பிரான் - மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடப்படும் இந்த விழாவை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2021-12-24 10:11 GMT

சென்னை,

கிறிஸ்துமஸ் அல்லது கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறவில்லை. நாளை  25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. 

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும், உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்தநாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகின்றனர்" 

மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா காலப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்