82 வயதில் 24 பட்டப்படிப்புகள்... 25-வது பட்டபடிப்புக்கு விண்ணப்பித்துள்ள முதியவர் ...!

தனது 82-வது வயதில் 25-வது பட்டபடிப்பிற்கான விண்ணப்பத்தை இவர் அளித்துள்ளார்.

Update: 2021-12-24 02:58 GMT
சென்னை ,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 82 வயதில் 25-வது பட்டப்படிப்புக்கு முதியவர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கதிரமங்கலத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (82).இவருக்கு சிறுவயது முதலே படிப்பில் அதிக ஆர்வம் இருந்து உள்ளது. இதனால் இன்றுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.இவர் தனது பணியில் இருந்து  ஓய்வு பெறுவதற்கு முன்பாக 12 பட்டய படிப்புகளும் , பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் 12  பட்டய படிப்புகளையும் முடித்துள்ளார். பி.ஏ , எம்.ஏ , என மொத்தம் 24 பட்டங்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது 82-வது வயதில் 25-வது பட்டபடிப்பிற்கான விண்ணப்பத்தை இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் அளித்துள்ளார். விண்ணப்பத்தை பெற்று கொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர், குருமூர்த்தி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்