உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள உரிமம் இல்லாத இறைச்சிக்கடைகள் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறைச்சி கடைகளுக்கான விதிகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,இறைச்சி கடைகளுக்கான விதியை அமல்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஊரக வளர்ச்சி இயக்குனருக்கு நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.