கொடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக்கிடம் போலீசார் விசாரணை
கொடநாடு எஸ்டேட்டுடன் தொடர்புடையவர், என்ற பெயரில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 30-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் உடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.