மதுரை: விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்து - காவலர் உயிரிழப்பு
மதுரையில் விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை,
மதுரை மாநகர் விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சரவணன் என்ற காவலர் உயிரிழந்துள்ளார். மற்றொரு காவலர் கண்ணன் படுகாயமடைந்துள்ளார்.
முன்னதாக இந்த இருவரும் நேற்று இரவு ரோந்து பணிக்கு சென்றிருந்தனர். அப்போது கீழவெளி வீதியில் பணியில் இருந்த அவர்கள் மீது, பழமையான கட்டடம் ஒன்று தீடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி சரவணன் என்ற காவலர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பணியில் இருந்த மற்றொரு காவலர் கண்ணன் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.