68 தமிழக மீனவர்கள், 75 படகுகளை மீட்க உடனடி நடவடிக்கை மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
கடந்த 19-ந்தேதியன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மற்றும் மண்படம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் 8 படகுகளை மீட்பதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரிடம், தொலைபேசி வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்குள் மீண்டும் 2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உடனடி நடவடிக்கை
இதுபோன்ற அச்சமூட்டும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிப்பதற்கான நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதும், மீனவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பதும் நமது கடமையாகும் என்றும் கடிதத்தில் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடமிருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக....
முதல்-அமைச்சர் எழுதிய இக்கடிதத்தை, நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.கள், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை நேரில் சந்தித்து தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து வலியுறுத்தி வழங்கினார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.