மத்திய மந்திரி எல்.முருகன் மீது தி.மு.க. அவதூறு வழக்கு சிறப்பு கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

மத்திய மந்திரி எல்.முருகன் மீது தி.மு.க. அவதூறு வழக்கு சிறப்பு கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு.

Update: 2021-12-21 18:57 GMT
சென்னை,

பா.ஐ.க. முன்னாள் மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, முரசொலி நாளிதழ் அலுவலக நிலம் தொடர்பாகவும், தி.மு.க. குறித்தும் எல்.முருகன் அவதூறாக பேசியதாக அவர் மீது தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒரு கோடி இழப்பீடு கேட்டிருந்தார்.

தற்போது எல்.முருகன் மத்திய மந்திரி என்பதால், இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். அப்போது முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற ஜனவரி 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்