ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும்: ஜவுளித்துறை மந்திரிக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

ஜிஎஸ்டி வரியை மீண்டும் குறைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-12-21 05:33 GMT
கோப்புப்படம்
சென்னை, 

மூலப்பொருட்களின் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடு முழுக்க நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதன்படி கோவையிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டன. கோவையில் நேற்று ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும். ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் . குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது” என்று அதில் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்