காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு

காவல்நிலையத்தில் திடீரென டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-12-18 17:12 GMT
கோவை,

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் டி.ஜி.பி.யை பார்த்தவுடன் அவருக்கான மரியாதையை அளித்தனர். 

பின்னர் காவல் நிலைய எல்லை மற்றும் வழக்குகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு கேட்டறிந்தார். இந்த காட்சிகள் அனைத்தும் காவல்நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. காவல்நிலையத்தில் திடீரென டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மேலும் செய்திகள்