திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச்செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் 77 மாவட்ட செயலாளர்கள், 30 எம்.பிக்கள், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.