ரூ.100 கோடி மதிப்பிலான அரசு நிலம்; விற்க முயன்ற ஆக்கிரமிப்பாளர்கள்...

காஞ்சீபுரம் அருகே 100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நீர்நிலை நிலம் ஆக்கிரமிப்பாளர்களால் விற்க முயலும்போது வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.

Update: 2021-12-17 15:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பாங்குழி கிராமத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே 200 மீட்டர் தொலைவில் 15.29 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி இருந்துள்ளது.

அந்த ஏரியை 50 வருடங்களாக தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் அதனை விற்க முயன்றுள்ளனர் என தெரிகிறது. இதனை அறிந்த வருவாய் துறையினர், அதனை தடுத்து நிறுத்தினர்.  இதன்பின், ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டு, அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்