பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2021-12-17 01:25 GMT

சென்னை,

கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது .

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது.  

அதன்படி பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி முதல் நேரடி தேர்வுகள்  நடைபெறும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது பி.இ., பி.டெக்., பி.ஆர்க்  மாணவர்களுக்கு ஜன. 21 முதல் மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் .எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., மாணவர்களுக்கு ஜன. 21 முதல் பிப்ரவரி இறுதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது 

மேலும் செய்திகள்