பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.29 கோடி கடன் உதவி அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு வழங்கினர்
சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ.29 கோடி கடன் உதவியை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்கு ஏதுவாக வங்கிக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு, 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10 ஆயிரத்து 785 பேருக்கு ரூ.28.85 கோடி உதவித்தொகையை வழங்கினர்.
அப்போது கே.என்.நேரு பேசுகையில், ‘சென்னையில் 719 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு சுயதொழில் புரிய ஏதுவாக ரூ.28.85 கோடி வங்கிக்கடன் உதவியும், பிரதமர் ஸ்வா நிதி திட்டத்தில் சாலையோர வியாபாரிகள் தொழில் புரிய ஏதுவாக ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 50 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சமும் கடன் உதவியாக வழங்கப்படுகிறது,’ என்றார்.
புதுப்பொலிவு
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘10 ஆண்டு காலம் சோர்ந்து கிடந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தற்போது புதுப்பொலிவு பெற்றிருக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் பதவி ஏற்ற 7 மாத காலத்திற்குள்ளாகவே தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 750 கோடி வங்கிக்கடன் உதவிகளை வழங்கியுள்ளார்' என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் டி.சினேகா, விஷூ மஹாஜன், டாக்டர் எஸ்.மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், மா.சிவகுரு பிரபாகரன், ஷேக் அப்துல் ரகுமான், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எம்.கே.மோகன், ஆர்.டி.சேகர், த.வேலு, இ.பரந்தாமன், ஜோசப் சாமுவேல், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஐட்ரீம் ரா.மூர்த்தி, கா.கணபதி, ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா உட்பட பலர் கலந்து கொண்டனர்.