திருச்செந்தூர் - பாலக்காடு இடையே மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது

திருச்செந்தூர் மற்றும் பாலக்காடு இடையேயான ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது பயணிகளிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-12-16 14:41 GMT
திருச்செந்தூர்,

இந்தியாவில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கடந்த ஆண்டு முதல் பயணிகளுக்கான ரெயில்கள் ஏதும் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படவில்லை.

தற்போது, தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.  இதனால், திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டிற்கு செல்லும் விரைவு ரெயிலானது பல மாதங்களுக்கு பிறகு இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது.

இதனால் பிற மாநில பக்தர்களின் வருகையும் அதிகரிக்கும் என உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையும் உயரும்.  நகர வருவாயும் கிடைக்கும்.  உள்ளூர் மக்களும் ரெயில் சேவையால் பலன் அடைவார்கள்.

மேலும் செய்திகள்