ஒமைக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
கொரோனாவின் உருமாற்றமான டெல்டா போன்ற வைரஸ் பரவலாக உள்ள நிலையில், புதிய உருமாறிய கொரோனாவான ‘ஒமைக்ரான்’ தற்போது 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக தகவல் வந்துள்ளன.
நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே பொதுசுகாதார வழிகாட்டிகளை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது அவசியமாகிறது.
முழுமையாக அமல்
முககவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை மிகக்குறைவாக காணப்படுகிறது. வீடுகளிலும், வெளியிடங்களிலும் கூடும் கூட்டங்களிலும் அவை பின்பற்றப்படுவதில்லை. எனவே தொடர்புடைய துறைகள், என்.ஜி.ஓ.க்கள் மூலம் தொற்று தடுப்பு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அதை செலுத்துவதையும், 2-வது டோசுக்காக காத்திருக்கிறவர்களுக்கு செலுத்துவதையும் விரைவுபடுத்த வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி, ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி, தீவிர சிகிச்சை பிரிவுகள், ‘வென்டிலேட்டர்’, மருந்துகள், மனிதவளம் போன்ற சுகாதார வசதிகள் இருப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
சரியான பதில் தகவல்
கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சபட்ச படுக்கை வசதிகள் மாற்றப்பட்டன. அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உருமாறிய பொது இடங்கள், ஆஸ்பத்திரிகளில் உருமாறிய கொரோனா பற்றிய விளக்கங்கள் அடங்கிய ‘பிளக்ஸ் போர்டு’களை அதிகமாக பொருத்த வேண்டும்.
கொரோனா அல்லது உருமாறிய கொரோனா என்ற பீதியை உருவாக்காமல், உலக சுகாதார மையத்தின் அறிவுரைகளை அப்படியே முழுமையாக பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பல உறுதிபடுத்தப்படாத தகவல்களால் பல குழப்பங்கள் உருவாகின்றன. அதை உங்களின் சரியான பதில் தகவல்கள் மூலம் முறியடிக்க வேண்டும். சுகாதார மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள், மத்திய அரசு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும்.
விமான நிலையங்களில்...
தொற்றுக்கு ஆளானவர்களுக்கான கண்காணிப்பு, சோதனை, தொடர்பு தடமறிதல் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும்.
அதிக நெருக்கடியுள்ள வசிப்பிடங்கள், பணியிடங்கள், தொழில் நடக்கும் பகுதிகள் பற்றிய தகவல்களை சேகரித்து பரிசோதனைகள் தொய்வின்றி நடத்தப்பட வேண்டும். எப்போதும்போல் நடத்தும் சோதனைபோல் அல்லாமல், கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பரிசோதனைக்கு உட்பட்டவர்களை சோதனை முடிவு வரும்வரை தனிமைப்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். இதன்மூலம் மற்றவர்களுக்கு உடனடியாக பரவுவதை தடுக்க முடியும். விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகளை எந்த தொய்வும் இல்லாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.