"நீர்நிலைகளை காக்க விரைவில் புதிய சட்ட முன்வடிவு"
தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த புள்ளி விவரங்கள் காண தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் தாலுகா வாரியாக சமர்பிக்கப்பட்டுள்ளது என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
தமிழகத்தில் நீர்நிலைகள் குறித்த புள்ளி விவரங்கள் காண தமிழ் நிலம் என்ற இணையதளத்தில் தாலுகா வாரியாக சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் 47,707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும்
அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட முன்வடிவு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.