காதலித்து கர்ப்பமானதால் கிண்டி ஐடிஐ மாணவி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

கிண்டி ஐடிஐ மாணவி காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Update: 2021-12-14 07:31 GMT
சென்னை

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவி கிண்டியில் உள்ள ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  மாணவி எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்