தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-12-14 06:53 GMT
திருச்சி,

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நைஜீரியாவில் இருந்து வந்த 7 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதில், ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்புக்கான வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவரின் மாதிரிகள் பெங்களூரு மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து பரிசோதனை முடிவுகள் இன்றோ அல்லது நாளையோ தெரிய வரும். சந்தேகம் உள்ள 7 பேரும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்,

மேலும் செய்திகள்