சாத்தான்குளம் வழக்கு: விசாரணையை நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விரைவாக முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு, ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்றும், இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.