வீட்டு காவலில் இருந்த தென்கொரியர்கள் தப்பிய வழக்கு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
வீட்டு காவலில் இருந்த தென்கொரியர்கள் தப்பிய வழக்கை சிபிஐ விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தை சேர்ந்த இரு தென் கொரியர்கள் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக வீட்டு காவலில் அடைக்கப்பட்டியிருந்தனர். முன்னதாக அவர்கள் மீது ஜிஎஸ்டி வரியாக வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.40.37 கோடியை செலுத்தாமல் மோசடி செய்தாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தசூழலில் வீட்டு காவலில் இருந்த இரு தென் கொரியர்களும் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்பி சென்றனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தநிலையில் ஜிஎஸ்டி மோசடி வழக்கில் வீட்டு காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் தப்பிய வழக்கை சிபிஐ விசாரணை செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.