சென்னையில் புத்தக கண்காட்சி ஜனவரி 6-ல் தொடக்கம்
சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள 45-வது புத்தக கண்காட்சியை ஜனவரி 6-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.