திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது, கருத்து சுதந்திரம் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் மாங்காடு பகுதியில் தேர்தலை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
"பொதுமக்கள், அதிமுகவினரின் எண்ணம் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது தான். அதிமுகவின் நிலைப்பாடும் அது தான். தீபக், தீபா ஆகியோர் பெருந்தன்மையோடு இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வு.
ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் திமுகவினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை மலை போல் உயர்ந்து கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.