வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க தமிழக அரசு சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், மீண்டும் பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை மாலைவேளைகளில் வைக்க வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை, வைட்டமின் டி குறைபாடு. ஒரு வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு 600 சர்வதேச யூனிட்டுகளும், 70 வயதை கடந்தவர்களுக்கு 800 சர்வதேச யூனிட்டுகளும் வைட்டமின் டி தேவை. சூரிய ஒளி நமது உடலில் படும்படி செய்வதுதான் இதற்கு தீர்வு.
வைட்டமின் டி குறைபாடு என்பது பொதுவாக இளமை பருவத்தில் தான் தொடங்குகிறது. இதற்கான முதன்மை காரணம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது குறைந்துவிட்டது தான்.
மாலை வெயிலில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. அது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் மாலை வேளையில் விளையாட்டு பாடவேளை வைக்கப்படுகிறது. ஆனால், இப்போது மதிப்பெண்களே முதன்மையானதாக மாறிவிட்டதால் விளையாட்டை பள்ளி நிர்வாகங்களும் அனுமதிப்பதில்லை; பெற்றோர்களும் விரும்பவில்லை.
சிறப்பு திட்டம்
நீரிழிவு நோய் போன்று வைட்டமின் டி குறைபாடு வரும் காலத்தில் மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது. எனவே இதை தடுப்பதற்காக சிறப்பு திட்டத்தை உருவாக்கி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக பள்ளிகளில் வாரத்திற்கு 5 பாடவேளைகள் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மாலை வெயிலில் மக்கள் நடைபயிற்சி செய்ய பூங்கா, விளையாட்டு திடல்களை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். வைட்டமின் டி குறைபாடு குறித்து மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.