கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்
பொதுமக்கள் வெளியில் வரும்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் வெளியில் வரும்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ்
புதுச்சேரியை 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதற்காக தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தடுப்பூசி போடும் பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
ஞாயிற்றுக்கிழமை என்று கூட பார்க்காமல் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் வெளியில் வரும்போது, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை கட்டாயம் தங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும். புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் மின்சாரம், தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் திலகா, வேல்முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.