ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கும் ஆளும் கட்சியினர் மீது, சட்டபூர்வமாக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தங்களுக்கு சாதகமாக செயல்படாத அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், திருந்தாத தி.மு.க. அரசின் ஆட்சியில், தொடர்ந்து அதிகாரிகள், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களால் மிரட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் மற்றும் இருக்கன்குடி பகுதிகளில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. இதில் தி.மு.க. பிரமுகர்களுக்கு சொந்தமான குவாரிகளில், புவியியல் துறையில் பெறப்பட்ட நடை சீட்டு ('பெர்மிட்') அளவைவிட, அதிக அளவு கனிமங்கள் வெட்டி கடத்தப்படுவதாக அரசு துறைகளுக்கு புகார்கள் வந்தன. பொதுமக்கள் அளித்த புகாரின்படி சேரன்மகாதேவி சப்-கலெக்டர் சிவ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, கடத்தல் லாரிகளை கனிமங்களோடு பறிமுதல் செய்ததோடு, பினாமி பெயர்களில் நடத்தும் குவாரிகளுக்கு சுமார் ரூ.20 கோடி அளவுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதன் காரணமாகவே சப்-கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சந்தோஷ்குமார்
இதேபோல ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் சந்தோஷ்குமாரை ஆளும் கட்சி பிரமுகர்களும், தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரர்களும் செய்யாத பணிகளுக்கு போலியாக பில்கள் தயாரிக்க சொல்லி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். கடந்த 8-ந்தேதி மதியம் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசி மூலம் மீண்டும் அவருக்கு உச்சகட்ட நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் உச்சத்தில், சந்தோஷ்குமார், காவல்கிணறு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வந்துள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன், தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முறைகேடாக டெண்டர் வைக்க சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், தன்னை உடனடியாக வேறு இடத்துக்கு பணிமாறுதல் செய்யக்கோரியும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவேண்டும்
ஆளுங்கட்சியின் அழுத்தத்தின் காரணமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மர்ம மரணத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரியிருந்தேன். இதுபோல தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், தைரியமாக ஒருசிலர் அளித்த புகார்கள் மீதோ அல்லது நடைபெற்ற சம்பவங்கள் மீதோ அரசு இதுவரை எந்தவிதமான விசாரணையையும் மேற்கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும், அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளர் சந்தோஷ்குமார் மர்ம மரணத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும். தி.மு.க.வினரின் கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின்போது அதிகாரிகள் எப்படி அச்ச உணர்வின்றி, நேர்மையாக மக்கள் பணியாற்றினார்களோ, அதுபோல் இப்போதும் அதிகாரிகள் சுதந்திரமாக மக்கள் பணியாற்றவும், சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்தவும், அதிகாரிகளை மிரட்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.