வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை?
பெங்களூரு கமாண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் குரூப் கமாண்டர் வருண் சிங்.
நீலகிரி,
நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் சிகிச்சை அளிக்க திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. வருண் சிங்கை குன்னூர் ராணுவ மருத்துவமனையில் இருந்து பெங்களூரு அழைத்துச்செல்ல அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.
பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டரை இயக்கியவர் குரூப் கமாண்டர் வருண் சிங் ஆவார்.ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த வருண் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.