புகார் மனு கொடுத்தவரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
புகார் மனு கொடுத்தவரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு.
சென்னை,
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பருத்திக்குளம் சித்தார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரி. துப்புரவு பணியாளர். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2019-ம் ஆண்டு எங்கள் ஊரில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் எடுக்க சென்ற என்னிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒரு பெண் தகராறில் ஈடுபட்டு சாதியை சொல்லி திட்டினார். இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்தேன். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தினார். என்னிடமும், எனது கணவரிடமும் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு நான் குற்றம்சாட்டிய பெண்ணுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் செயல்பட்டு என்னை தாக்கினார். எனவே, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார்.