ஜெயலலிதா சமாதியில் அணையா விளக்கு அணைந்தது
அணையா விளக்கின் மேல் காற்று புகாதவாறு கண்ணாடி பேழையை வைத்தனர். இதன்பின்னர் அணையா விளக்கு பிரகாசமாக எரிந்தது.
சென்னை ,
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதி அருகே அணையா விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கியாஸ் மூலம் இந்த விளக்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்துக் கொண்டே இருக்கும்.
இந்தநிலையில் ஜெயலலிதா நினைவு தினமான நேற்று காலை அவரது சமாதியில் உள்ள அணையா விளக்கு திடீரென்று அணைந்து போனது. அ.தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் இந்த விளக்கு அணைந்தது.
பொதுப்பணித்துறை ஊழியர்கள் உடனடியாக அணைந்த விளக்கை மீண்டும் எரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் காரணமாக மீண்டும், மீண்டும் விளக்கு அணைந்து கொண்டே இருந்தது.
இதையடுத்து அணையா விளக்கின் மேல் காற்று புகாதவாறு கண்ணாடி பேழையை வைத்தனர். இதன்பின்னர் அணையா விளக்கு பிரகாசமாக எரிந்தது.