ஊட்டி-மைசூர் சாலையில் உலா வரும் புள்ளி மான்கள்

வனப்பகுதியில் நன்றாக மழை பெய்துள்ளதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஊட்டி-மைசூர் சாலையில் உலா வருகின்றன.

Update: 2021-12-05 03:47 GMT
ஊட்டி,

ஊட்டி-மைசூர் சாலையில் புள்ளி மான்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வனப்பகுதியில் நன்றாக மழை பெய்துள்ளதால் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக ஊட்டி-மைசூர் சாலையில் உலா வருகின்றன. 

அவ்வாறு உலாவும் புள்ளி மான்கள் அருகில் நின்று புகைப்படம் எடுக்கவோ, வனவிலங்குகளுக்கு திண்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றை வழங்கவோ வேண்டாம் எனவும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வனவிலங்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது வனச்சட்டம் பாயும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

மேலும் செய்திகள்