தடையை மீறி உண்ணாவிரத போராட்டம்; திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
தடையை மீறி உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்றும், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், எம்.பி., எம்எல்ஏக்களும் பங்கேற்பார்கள் என்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. எனினும் தடையைமீறி உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், தடையை மீறி உண்ணா விரத போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட 2 ஆயிரம் பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.