தடுப்பூசி கண்டிப்பாக வரும்; அதுவரை நாம் கவனமாக இருக்கவேண்டும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி கண்டிப்பாக வரும் அதுவரை நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2020-12-16 21:45 GMT
சென்னை, 

சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் மத்தியில் கொரோனா நோய்த் தொற்று பரவியது. கடந்த 14-ந் தேதி இந்த நோய்த்தொற்றால் மாணவர்கள், பணியாளர்கள், ஒரு அலுவலர் என மொத்தம் 104 பேர் பாதிக்கப்பட்டனர். மறுநாள் மேலும் 79 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. நேற்று முன்தினம் 141 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று தெரியவந்தது. அதில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்து இருக்கிறது. 

இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று ஆய்வு செய்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-

கல்லூரிகளில் ஒரு மெஸ், சாப்பாடு அறை இருந்தால் உணவை அங்கே சாப்பிடாமல் எடுத்து சென்று சாப்பிடவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். முக கவசம் அணியாமல் இருக்கும் சிறிய தவறினால் பெரிய ஆபத்தை சந்திக்கிறோம். இனி தவறு செய்பவர்கள் மீதும், அந்த கல்லூரி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி கண்டிப்பாக வரும். அதுவரை நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்