சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு; அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா-வீடியோ
சென்னை ஐ.ஐ.டியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது என ய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் என 183 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை தொடங்கியது.
இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு விடுதியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனையை நேற்று காலை மேற்கொள்ள தொடங்கினர். ஒரு விடுதியில் 100 மாணவர்கள் வீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைத்து மாணவர்களின் முகவரி உள்பட சுயவிவரங்கள் பெற்று அவர்களின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.
மாணவர்களிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது என ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். மேலும் அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என கூறினார்.