நடத்தையில் சந்தேகம்:கர்ப்பிணி மனைவி கொலை கணவனுக்கு தூக்கு - தேனி நீதிமன்றம்

நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கருச்சிதைவுக்கு ஆளாக்கி கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-12-15 07:08 GMT
தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி கற்பகவள்ளி. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த  சுரேஷ்  மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். . இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி சுரேசிற்கு 10000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்