வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-14 07:31 GMT
மதுரை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தனது தேர்தல் பிரசாரத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். 

இந்நிலையில், மதுரையில் இன்று இரண்டாவது நாளான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களில் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது:-

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டி என்பதை பின்னர் அறிவிக்கப்படும் . நேர்மையை வைத்து அரசியல் செய்வேன். 

ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்வேன். வரும் 31-ம் தேதி ரஜினி கட்சி அறிவிப்பு வரும் வரை பொறுத்திருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றிலும் கூடாது என்பது மடமை. 

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்