நாகர்கோவில்-தாம்பரம், மதுரை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில்-தாம்பரம், மதுரை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-12-13 00:04 GMT
சென்னை, 

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவனந்தபுரம்-மங்களூர்

* திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (வண்டி எண்: 06304) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் அதிகாலை 5.05 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து இயக்கப்படும்.

* எர்ணாகுளம்-கண்ணூர் (06305) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற வருகிற 15-ந்தேதி முதல் காலை 6 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கண்ணூர்-எர்ணாகுளம் (06306) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் மதியம் 2.50 மணிக்கு கண்ணூரில் இருந்தும் புறப்படும்.

* திருவனந்தபுரம்-மங்களூர் (06347) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் இரவு 8.50 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மங்களூர்-திருவனந்தபுரம் (06348) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 19-ந்தேதி முதல் மதியம் 2.20 மணிக்கு மங்களூரில் இருந்தும் புறப்படும்.

தாம்பரம்-நாகர்கோவில்

* திருவனந்தபுரம்-மதுரை (06343) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மதுரை-திருவனந்தபுரம் (06344) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கும் புறப்படும்.

* திருவனந்தபுரம்-குருவாயூர் (06342) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 15-ந்தேதி முதல் மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்தும், மறுமார்க்கமாக குருவாயூர்-திருவனந்தபுரம் (06341) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் மதியம் 3.25 மணிக்கு குருவாயூரில் இருந்தும் புறப்படும்.

* தாம்பரம்-நாகர்கோவில் (06065) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் ஞாயிறு, திங்கள், புதன்கிழமைகளில் மட்டும் இரவு 7.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம் (06066) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 17-ந்தேதி முதல் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்